அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ஓடிடியில் வெளியானது டிஎன் 2026!

டிஎன் 2026 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

tn2026

டிஎன் 2026 படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :

நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த அரசியல் திரைப்படமான ’டிஎன் 2026’ ஒடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், உமாபதி ராமையா. நடிகர் தம்பி ராமையா கதை மற்றும் வசனம் எழுதி, அரசியல் கலந்த நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள ’டிஎன் 2026’ படத்தை உமாபதி ராமையா இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில், நடிகர்கள் நட்டி, எம்.எஸ். பாஸ்கர், இளவரசு ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஸ்ரீத்தா ராவ், விஜி சந்திரசேகர், கிங்காங், தேவி மகேஷ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கண்ணன் ரவி குழு மற்றும் கந்தரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

சிறப்புத் தோற்றத்தில் சாண்டி நடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், ’டிஎன் 2026’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியான நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.