த்ரிஷ்யம் - 3 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் - நடிகர் மோகன்லால் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
த்ரிஷ்யம் - 2 படத்தின் தொடர்ச்சியாக, ஜார்ஜ் குட்டியின் மூத்த மகள் அஞ்சுவின் திருமண ஏற்பாடுகளுடன் த்ரிஷ்யம் - 3 படத்தின் கதை தொடங்குகிறது.
முந்தைய பாகங்களில் நடித்த மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் மூன்றாம் பாகத்திலும் தங்கள் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தத் திரைப்படம் நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளான கடந்த மே 21 ஆம் தேதி வெளியாகி, நல்ல விமர்சனங்களைப் பெற்றது
இந்நிலையில், த்ரிஷ்யம் 3 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information regarding the OTT release of the film Drishyam 3 has emerged.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







