FOLLOW US

ON GOOGLE DISCOVER

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஓடிடியில் இதயம் முரளி எப்போது?

இதயம் முரளி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

இதயம் முரளி போஸ்டர். - படம் - எக்ஸ்

Updated On :20 ஜூலை 2026, 2:23 pm IST

நடிகர் அதர்வாவின் இதயம் முரளி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள் அதர்வா, ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இசையமைப்பாளர் தமன் இசையமைத்த பாடல்களும் கவனம் பெற்றிருக்கிறது. இவர், இதயம் முரளி படத்தின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகராகவும் களம் இறங்கியுள்ளார்.

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப் படம் வெளியானது.

இந்த நிலையில், இதயம் முரளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

Summary

Information regarding the OTT release of actor Atharvaa's film Idhayam Murali has been revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.