நடிகர் அதர்வா இதயம் முரளி திரைப்படம் தன் தந்தைக்காக கொடுத்த மரியாதை எனத் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த திரைப்படமான இதயம் முரளி திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இருந்தும், இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் கணிசமாக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால், இப்படம் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் அதர்வா, “என் அப்பா முரளிக்கு ஏதாவது ஒரு வகையில் சமர்ப்பணம் செய்ய வேண்டுமென நினைத்திருந்தேன். அப்போதுதான் ஆகாஷ் பாஸ்கரன் வந்தார். ஒரு நல்ல நண்பராக அவரே இதனைச் செய்து முடித்துவிட்டார். என் அப்பா முரளிக்கு மரியாதை செலுத்து விதமாகவும் படம் அழகாக அமைந்துவிட்டது. இப்படத்தில் நடிகர் சின்னி ஜெயந்த் பேசிய வசனங்களும் பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடலும் என் கண்களைக் குளமாக்கிவிட்டன.” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Atharvaa has stated that the film Idhayam Murali is a tribute to his father.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதர்வாவின் இதயம் முரளி திரைப்பட வசூல் எவ்வளவு?
முதல் நாளில் 60 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்ற இதயம் முரளி..! தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் ரிலீஸ்!

இந்த வாரம் (ஜூலை 10) வெளியாகும் திரைப்படங்கள்!

அதர்வாவின் இதயம் முரளி படத்தின் டிரைலர் அறிவிப்பு!
விடியோக்கள்
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP




