நடிகர் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்திற்கு நேற்று (ஜூலை 10) ஒரே நாளில் 60 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த திரைப்படமான இதயம் முரளி திரைப்படம் நேற்று (ஜூலை 10) திரையரங்குகளில் வெளியாகியது.
இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் உருவாகியுள்ளன.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்தப் படத்துக்கு அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைத்த பாடல்களும் கவனம் பெற்றிருந்த நிலையில், இதன் டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்தது.
தொடக்கத்தில் இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்துவருகிறது.
தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. அதர்வாவிற்கு இந்தப் படம் கம்பேக் படமாக அமையுமென ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Love has found its way to the big screen. â¤ï¸#HrudayamMurali in cinemas now â¤ï¸âð¥
— Mythri Movie Distributors LLP (@MythriRelease) July 11, 2026
ðï¸ Book Now: https://t.co/IenRkJl3k2
Telugu States Release by @MythriOfficial â¤ï¸âð¥@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran #FahadhFaasil @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar⦠pic.twitter.com/Z3gPubAR4g
Summary
'Idhayam Murali film sold 60,000 tickets on the very first day! Following the Tamil release, it is now releasing in Telugu too!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









