கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

மகனின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவேன்: ஜாய் கிரிசில்டா

ஜாய் கிரிசில்டா தன் மகன் குறித்து பதிவிட்டுள்ளார்...

News image

ஜாய் கிரிசில்டா , மாதம்பட்டி ரங்கராஜ் தன் மகன் ராகாவுடன்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 4:24 pm IST

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன் மகனின் எதிர்காக உரிமைகளுக்காக போராடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்தாண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அது தன் குழந்தை இல்லை என ரங்கராஜ் கூற, பிரச்னை தீவிரமானது. தொடர்ந்து, டிஎன்ஏ பரிசோதனையில் அக்குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தந்தை என நிரூபணமானது.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஜாய் கிரிசில்டா தொடர்ந்து பதிவுகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இதற்கிடையே, பிறந்த ஆண் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் எனப் பெயரிட்டார். தற்போது, மாதம்பட்டி ரங்கராஜ், ”தன் மகன் ராகாவுக்கு ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன்.

இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜாய் கிரிசல்டா இன்ஸ்டாகிராமில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ”ஒரு தாய் மட்டுமே உணரக்கூடிய போராட்டத்துடன் இருந்த இந்த பயணத்திற்குப் பின், என் மகன் அனைத்து குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய தனது உரிமையான அடையாளத்தையும், பொதுவான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறான். ஆனால், யாரும் ஒருபோதும் அமைதியாக அழுத, தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்ட அந்தத் தாயைப் பார்க்கவில்லை.
தன் சிறு மகனுக்குத் தகுதியான உண்மையை வழங்க, ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நின்ற அந்தத் தாயைப் பார்க்கவில்லை.

இந்தப் பயணம் யார் சரி, யார் தவறு என்பதை நிரூபிப்பதற்காக அல்ல. ஒரு குழந்தை அங்கீகரிக்கப்படவும், அன்பைப் பெறவும், பாதுகாக்கப்படவும் தகுதியானவன் என்பதற்காக மட்டுமே.

இது எதையும் நிரூபிக்க வேண்டும் என்ற போராட்டம் அல்ல…
இது யாரையாவது வெல்வதற்கான போராட்டமும் அல்ல. இந்த உலகில் உனக்கான அன்பும், மரியாதையும், உனக்குரிய இடமும் இருக்கிறது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் நீ (மகன்) அறிய வேண்டும் என்பதற்காகவே போராடினேன். ராகா ரங்கராஜ், “நான் யார்?” என்று ஒருநாளும் குழப்பத்துடன் வளரக் கூடாது என்பதே என் ஒரே நோக்கம்.

இன்று, உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நிறைவேற்றியிருக்கிறேன்.“வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும்… உனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்காக நான் ஒருபோதும் போராடுவதை நிறுத்த மாட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Fashion designer Joy Griselda has stated that she will fight for her son's future and rights.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.