மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ஊக்குவிக்க ஆள் இருந்தால்...

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்புப் பயிற்சியாளர் எம்.இ.ஜெயந்தி, இந்தியன் வங்கிகள் நடத்தும் சுயதொழில் பயிற்சி மையங்களில் பயிற்சி அளித்து வருகிறார்.

News image
Updated On :26 ஜூலை 2026, 4:00 am IST

சி.வ.சு.ஜெகஜோதி

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்புப் பயிற்சியாளர் எம்.இ.ஜெயந்தி, இந்தியன் வங்கிகள் நடத்தும் சுயதொழில் பயிற்சி மையங்களில் பயிற்சி அளித்து வருகிறார்.

'எண்ணூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்குத் தையல் பயிற்சி அளித்துள்ளேன். அவர்களில் பலரும் அம்மா என்று அன்போடு அழைப்பார்கள். அந்த அழைப்பில், அந்த வார்த்தையில் ஓர் இனம் புரியாத ஆனந்தம் கிடைக்கிறது. இந்த அற்புத உணர்வும், நம்மைச் சுற்றி எப்போதும் 10 பேராவது இருக்கிறார்களே என்ற எண்ணமும் தையல் பயிற்றுநராகவே இருந்துவிடுவோம் என்று என்னை மாற்றிவிட்டது'' என்கிறார். சாதனையாளராக மிளிரும் எம்.இ.ஜெயந்தியிடம் மேலும் பேசியபோது:

'எனது தாயார் தையல் கலைஞர். அவருக்கு உதவி செய்து, சிறிது சிறிதாகத் தையல் கலையைக் கற்றேன். பின்னர் வேறு ஒருவரிடமும் பெண்கள் ஆடைகளின் வகைகள், வடிவங்கள், துணிகளின் தரம், வடிவமைப்பு ஆகியன குறித்து கற்றேன். தையல் பயிற்சியை முடித்தமைக்கான சான்றிதழும் அவர் வழங்கினார். அவரிடம் பயிற்சி முடித்த நேரத்தில், காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் ஆடை வடிவமைப்பு இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பைப் பார்த்தேன். அந்தப் பயிற்சியையும் பெற்று இந்தியன் வங்கியின் சான்றிதழ் பெற்றேன்.

இந்தச் சான்றிதழ் பெற்றபோது, தையல் கலைஞராக இருப்பதைவிட தையல் ஆசிரியையாக இருந்தால், பலரது அறிமுகம் கிடைக்கும். வருமானமும் வரும் என்பதோடு, பலருக்கும் சுயதொழில் பயிற்சி அளித்து, அவர்களது வாழ்வையும் உயர்த்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

வங்கிகள் நடத்தும் பயிற்சி மையத்தில் பயிற்றுநராக வேண்டும் என்பதற்காக, புதுக்கோட்டையில் நடைபெறும் பயிற்றுநர் தேர்வையும் எழுதித் தேர்ச்சி பெற்றேன். நான் படித்த அதே காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் தையல் பயிற்றுநரானேன்.

இதுவரை வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் வங்கிகளின் சுயதொழில் பயிற்சி மையங்களில் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். என்னிடம் படித்தவர்களில் முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் தையல் கடைகளை நடத்தி வருகின்றனர்.

ஏராளமான பெண்கள் வீடுகளிலேயே துணிகளைத் தைக்கின்றனர். பி.ஏ. வரலாறு முடித்து ஆசிரியர் படிப்பை முடித்திருந்தும், பள்ளி ஆசிரியர் பணியைவிட தையல் ஆசிரியர் பணியை நேசிக்கிறேன். இணைய வழியிலும் தையல் பயிற்சி கற்றுத் தருகிறேன். கஷ்டங்களை எப்படிச் சமாளிப்பது என்று எனது அனுபவங்களைக் கூறி மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறேன்.

"ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவரும் தேக்கு விற்பார்கள்' என்கிற கவிஞர் வாலியின் கூற்றுக்கு ஏற்ப பலரையும் ஊக்கப்படுத்தி வருகிறேன்'' என்கிறார் ஜெயந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.