ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் நடிகை த்ரிஷா?

த்ரிஷா நடிப்பதிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது...

நடிகை த்ரிஷா

Published On :

நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஐடெண்டிட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து, இந்தாண்டு நடிகர் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கர்ஜணை மற்றும் சதுரங்க வேட்டை - 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இந்தாண்டு இறுதியில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த ராம் திரைப்படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, த்ரிஷா நடித்த தெலுங்கு படமான விஸ்வம்பரா படமும் வெளியாகக் காத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டிற்கு சில திரைப்படங்களில் ஒப்பந்தமான த்ரிஷா, ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாவதைத் தவிர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வெடுக்கத் த்ரிஷா திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. மேலும், த்ரிஷா தயாரிப்புத் துறையில் இறங்கலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.

Reports indicate that actress Trisha plans to quit the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.