ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அடுத்தடுத்து ஓடிடியில் ஸ்ரீ கௌரி பிரியாவின் காதல் திரைப்படங்கள்!

சென்னை லவ் ஸ்டோரி திரைப்படத்தின் ஓடிடி தேதி....

ஸ்ரீ கௌரி பிரியா

Published On :

நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்த 'சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சென்னை லவ் ஸ்டோரி. இதில், நாயகனாக கிரண் அப்பாவரமும் நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியாவும் நடித்திருந்தனர்.

தெலுங்கில் முழுநீளக் காதல் திரைப்படமாக கடந்த ஜூலை 24 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. இப்படம் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தெலுங்கில் காதல் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படமும் கணிசமான லாபத்தை அடைந்தது. வளர்ந்துவரும் நடிகரான கிரண் அப்பாவரத்தின் ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடினர்.

Story image

இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வருகிற ஆக. 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ’மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் வெற்றியைக் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே, ஜிவி பிரகாஷ் உடன் இவர் நடித்த ஹேப்பி ராஜ் திரைப்படமும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அப்படம் ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியாக அடுத்த சில மாதங்களிலேயே தன் இன்னொரு வெற்றிப்படத்துடன் கௌரி ப்ரியா வரவுள்ளார். தொடர்ந்து, இவர் காதல் திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.