FOLLOW US

ON GOOGLE DISCOVER

தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

ரெடியா? அனிருத் பதிவால் ரசிகர்கள் உற்சாகம்!

ஜெயிலர் - 2 முதல் பாடல் அப்டேட் கொடுத்த அனிருத்...

News image
Updated On :19 ஆகஸ்ட் 2026, 5:54 pm IST

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து அனிருத் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலை வருகிற ஆக. 21 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வருவதால் ரஜினி ரசிகரான அவர் இப்படத்திற்காக சிறப்பான பாடலைக் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அனிருத், ‘தயாரா?’ எனக் கேட்டு செண்டை மேளம் இசைக்கருவியைப் பதிவிட்டுள்ளார். இதனால், முதல் பாடல் கேரள செண்டை இசையுடன் கூடிய பாடலாக இருக்கலாம் ஊகிக்கப்பட்டுள்ளது. பேட்ட திரைப்படத்திலும் மேள இசையுடன் கூடிய முதல் பாடல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Anirudh has posted about the first song from the movie Jailer 2, starring actor Rajinikanth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.