FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

இந்த முறை பாக்யஸ்ரீ போர்ஸ்... போஸ்டர் வெளியிட்ட சாய் அபயங்கர்!

ரதிமா பாடலில் பாக்யஸ்ரீ போர்ஸ்...

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:58 pm IST

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ரதிமா ஆல்பத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சில மாதங்களுக்கு முன் பவழ மல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.

இப்பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபில் 28 கோடி பார்வைகளைக் கடந்தது. திரையிசையிலும் ஆல்பம் பாடல்களிலும் சாய் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தன்னுடைய 6-வது ஆல்பம் பாடலுக்கு சாய், ‘ரதிமா’ எனப் பெயரிட்டுள்ளார். மேலும், இப்பாடல் இந்த வார இறுதியில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

இந்த நிலையில், முன்னணி நடிகைகளைத் தன் ஆல்பங்களில் ஆட வைக்கும் சாய் அபயங்கர் இம்முறை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸை ரதிமா ஆல்பத்தில் நடிக்க வைத்துள்ளார். தெலுங்கு நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது, சிவகார்த்திகேயனுடன் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Bhagyashree Borse has starred in music composer Sai Abhyankar's Rathima album.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.