ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

இதற்காக என் அம்மா என்னை ப்ளாக் செய்தார்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தன் தாய் குறித்து பேசியுள்ளார்...

News image

பாக்யஸ்ரீ போர்ஸ்

Updated On :29 ஜூலை 2026, 4:37 pm IST

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தன் சினிமா விருப்பத்தால் வீட்டினரிடமிருந்து வந்த எதிர்ப்பைப் பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் நல்ல முகவெட்டும் நடிப்பாற்றலும் கொண்ட நடிகையென்பதால் கதையம்சமுள்ள படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். அதேநேரம், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான எந்தத் திரைப்படமும் வணிக வெற்றியைப் பெறாமல் இருந்தது.

அண்மையில் வெளியான லெனின் திரைப்படம் வெற்றியைப் பெற்று அவர் மீதான அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்கிற பெயரையும் மாற்றியது. இந்த வெற்றியால், தன்னை ராசில்லாத நடிகையெனச் சொன்னவர்களுக்கு, ”சினிமா என்பது கூட்டுழைப்பு சார்ந்தது. அதில் வெற்றி கிடைத்தால் அனைவருக்குமானதுதான். ஆனால், தோல்வியடைந்தால் நடிகை ராசியில்லாதவர் என எப்படிச் சொல்ல முடிகிறது? என்னை ராசியில்லாத நடிகை எனக் கூறிய போது, அது காயத்தைத் தரவில்லை. மாறாக, குழப்பத்தைத்தான் கொடுத்தது. ஒரு திரைப்படத்தில் இயக்குநர், திரைக்கதை, நாயகன் எனப் பலர் சம்பந்தப்பட்டிருந்தாலும் தோல்விக்கு நடிகைகளைக் குற்றம்சாட்டுகின்றனர்.” என பாக்யஸ்ரீ பதிலடியும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், “நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் எனச் சொன்னதும் என் அம்மா கடுமையாக எதிர்த்தார். மேலும், வாட்ஸ் ஆப்பில் என் எண்ணை 6 மாதங்களுக்கு ப்ளாக் செய்து வைத்தார். இதனால், நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அப்பாவும், சகோதரியும் ஆதரவு தெரிவிக்கவில்லை. பின், திரைத்துறையில் போராடி எனக்கான இடத்தைப் பிடித்தேன். அனைவரும் என் பெற்றோரை வியந்து பாராட்டும் அளவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் லட்சியமாக இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Actress Bhagyashree Borse has spoken about the opposition she faced from her family due to her desire to pursue a career in cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.