FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

டாக்ஸிக் - 12,000 திரைகளுக்கு மேல் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம்?

டாக்ஸிக் திரைப்படம் உலகளவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது...

 actor Yash'

நடிகர் யஷ் - படம் - டிரைலர் விடியோ க்ளிப்

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:24 pm IST

நடிகர் யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் திரைப்படம் மிக அதிக திரைகளில் வெளியாகிறது.

நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் ஆக. 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான டிரைலரில் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடித்த யஷ் தோற்றங்கள் கவனம் பெற்றிருந்தன. மேலும், மோசமான வன்முறைக் காட்சிகளும் இருப்பதால் இந்தியாவின் அதீத வன்முறைக் காட்சிகள் கொண்ட பெரிய திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளதால் அந்த மொழி ட்ரைலரும் ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும், டாக்ஸிக் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் 3.14 மணி நேரம் ஓடக்கூடிய கால அளவையும் கொண்டுள்ளது.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை உலக அளவில் 12,000 திரைகளுக்கு மேல் வெளியிடத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறதாம். இந்த எண்ணிக்கையில் வெளியானால் அதிக திரைகளில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்கிற சாதனையை டாக்ஸிக் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The movie Toxic, starring actor Yash, is being released on a very large number of screens.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.