

ஜன நாயகன் திரைப்படம் தாமதமாவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பதிவிட்டது வைரலாகி வருகிறது.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் செய்வது குறித்து அவரது கருத்து விஜய் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காததால், இந்த விவகாரம் குறித்து ஜன.9 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியதாவது:
இது முற்றிலும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். எந்த ஒரு திரைப்படமும் ஒரு மனிதரால் உருவானதல்ல; அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் உழைப்பு இருக்கிறது.
திரைக்குச் செல்ல பணமும் இதில் ஈடுபட்டுள்ளது. படக்குழுவுக்கு எனது ஆதரவு. இது தளபதியின் படம், கடைசி படம் வேறு. எப்போது வெளியானாலும் இந்தப் படத்தை இதுவரை இல்லாத அளவுக்குக் கொண்டாடுவோம்.
தலைவன் படம் எப்போ தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ அப்போ தியேட்டர் போகிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டிலும் இந்தப் படம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.