

பராசக்தி படத்தின் புதிய பாடல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியானது.
இயக்குநர் சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100வது படமாக இப்படம் உள்ளதால், டிரைலரின் பின்னணி இசையும் வலுவாக உள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தித் திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
மேலும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் அன்றைய அரசியலை மையப்படுத்தியும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பராசக்தி படத்தில் இடம்பெற்றுள்ள சேனைக் கூட்டம் என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு யுகபாரதி வரிகளை எழுத, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.