

ஆஸ்கர் 2026 விருதுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான பிரிவில் நான்கு இந்திய படங்கள் தேர்வாகியுள்ளன.
தமிழில் இருந்து டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படம் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரை உலகில் மிகுந்த மதிப்பு மிக்க விருதாக ஆஸ்கர் விருது கொண்டாடப்படுகிறது. இதன் 98-ஆவது ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ச் 15ஆம் தேதி வழங்கப்பட இருக்கின்றன.
மொத்தமாக 24 பிரிவுகளில் 98-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து நாமினேஷன்கள் இருக்கும். சிறந்த படத்துக்கான பிரிவில் மட்டும் 10ஆக இருக்கும்.
இந்த சிறந்த படத்துக்கான போட்டியில் பங்கேற்க மொத்தமாக 317 படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 201 படங்கள் தேர்வாகியுள்ளன.
இந்தப் படங்களுக்கு வாக்களித்து இறுதிப் பட்டியலில் 10 படங்களாகத் தேர்வு செய்யப்படும்.
இந்தியாவில் இருந்து நான்கு திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.
1. டூரிஸ்ட் ஃபேமலி : அபிஷன் ஜீவித் இயக்கிய தமிழ்த் திரைப்படம்.
2. காந்தாரா சேப்டர் -1 : ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம். இதில் ருக்மிணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
3. சிஸ்டர் மிட்நைட் - ராதிகா ஆப்தே நடிப்பில் கரண் காந்தாரி இயக்கிய ஹிந்திப் படம்.
4. தன்வி தி கிரேட் - அனும்கெர் இயக்கிய ஹிந்தித் திரைப்படம்.
மஹாஅவதார் நரசிம்மா - அஸ்வின் குமார் இயக்கிய அனிமேஷன் திரைப்படம் சிறந்த அனிமேஷன் படப் பிரிவில் தேர்வாகியுள்ளது.
இந்தியா சார்பாக நீரஜ் கய்வான் இயக்கிய ஹோம்பவுண்ட் திரைப்படம் வெளிநாட்டு சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.