ஆஸ்கர் 2026: சிறந்த படத்துக்கான பட்டியலில் தேர்வான டூரிஸ்ட் ஃபேமலி!

ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் தேர்வான தமிழ்த் திரைப்படம் குறித்து...
Tourist Family movie poster.
டூரிஸ்ட் ஃபேமலி பட போஸ்டர்.படம்: எக்ஸ் / மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்.
Updated on
1 min read

ஆஸ்கர் 2026: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படம் 98-ஆவது ஆஸ்கர் விருதில் சிறந்த படத்துக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளது.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த ஏப்.29ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

சென்னை திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு, ’2 ஆவது சிறந்த தமிழ் திரைப்படம்’ எனும் விருதும் நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் தரப்பட்டது.

ஆஸ்கரின் சிறந்த படத்துக்கான போட்டியில் 317 படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், 201 படங்கள் மட்டுமே தேர்வாகியுள்ளன.

இந்தப் படங்களுக்கு வரும் ஜன.12 முதல் ஓட்டெடுப்புகள் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக சிறந்த படத்துக்கான போட்டியில் தேர்வான படங்களின் எண்ணிக்கையை விட இந்தாண்டு குறைவாகவே தேர்வாகியுள்ளது.

கடந்தாண்டுகளில் சிறந்த படத்துக்கான போட்டியில் தேர்வான படங்களின் எண்ணிக்கை

2024 - 207 திரைப்படங்கள்

2023 - 265 திரைப்படங்கள்

2022 - 301 திரைப்படங்கள்

2021- 276 திரைப்படங்கள்

2020 - 366 திரைப்படங்கள்

Tourist Family movie poster.
சமந்தாவின் மா இன்டி பங்காரம் டீசர் டிரைலர்!
Summary

The film 'Tourist Family', directed by debutant director Abishan Jeevinth, has been selected for the Best Picture category at the 98th Academy Awards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com