பிக் பாஸ் நிகழ்ச்சியால் படங்கள், இணையத் தொடர் வாய்ப்பு! கெமி நெகிழ்ச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு புதிய படங்களிலும் இணையத் தொடர்களிலும் ஒப்பந்தமாகியுள்ளதாக நடிகை கெமி தெரிவித்துள்ளது குறித்து ...
கெமி
கெமிபடம் - எக்ஸ்
Updated on
2 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு புதிய படங்களிலும் இணையத் தொடர்களிலும் ஒப்பந்தமாகியுள்ளதாக நடிகை கெமி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பின்னணி ஏதுமின்றி, எதிர்காலம் குறித்த பெரிய கேள்வியுடன் நுழைந்ததாகவும், ஆனால், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியால் கேள்விகளுக்கு பதில் கிடைத்து, எதிர்காலம் குறித்த அச்சம் நீங்கியுள்ளதாகவும் கெமி குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்த வார முடிவில் பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

கானா வினோத், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம், சான்ட்ரா, திவ்யா கணேசன், அரோரா ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இதில், பணப்பெட்டியில் உள்ள ரூ. 18 லட்சமே போதும் என்று அப்பெட்டியை எடுத்துக்கொண்டு கானா வினோத், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

வினோத் வெளியேறும்போது உடன் நின்று அழுத கெமி
வினோத் வெளியேறும்போது உடன் நின்று அழுத கெமிபடம் - எக்ஸ்

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக சான்ட்ரா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்த எபிஸோட் இன்று இரவு ஒளிபரப்பாகும்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் அரோரா, திவ்யா கணேசன், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என நான்கு பேரே எஞ்சியுள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் மக்கள் வாக்களிப்பார்கள். அதிக வாக்குகளைப் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். வெற்றியாளருக்கு கோப்பையுடன் ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

பிக் பாஸ் நிறைவுபெறவுள்ளதால், முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு அழைப்பாளர்களாக வரவேற்கப்பட்டனர். வியானா, பிரவீன்ராஜ் தேவசகாயம், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, அப்சரா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கெமி
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கெமிபடம் - எக்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கை எப்படி மேம்பட்டுள்ளது என்று விஜய் சேதுபதி ஒவ்வொருவரிடமும் கேட்டார். அப்போது பேசிய கெமி, மூன்று இணையத்தொடர்களில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்தடுத்து, புதிய படங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு எந்தவொரு பின்னணியும் இல்லாமல் எதிர்காலம் குறித்த பெரிய கேள்வி இருந்தது, ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பதில் கிடைத்துள்ளதாகவும், தற்போது அச்சமின்றி வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

விஜய் சேதுபதி உள்பட பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கெமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களும் கெமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கெமி
பிரஷாந்த் உடன் ஜோடி -2 படம்! பிக் பாஸ் வீட்டில் உறுதிப்படுத்திய பிரவீன் காந்தி!
Summary

Bigg boss 9 tamil kemi about her new movies web series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com