

மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லெக் ஸ்டிராட்டில் எனப்படும் கால்களை விரிக்கும் உடற்பயிற்சி செய்யும்போது வலியால் கத்திய அந்த விடியோ 3.7 மில்லியன் (37 லட்சம்) பார்வைகளைக் கடந்துள்ளது.
பாசில் ஜோசப் இயக்கி, 2021-ல் வெளியான மின்னல் முரளி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஃபெமினா ஜார்ஜ். 28 வயதாகும் இவர் இதற்கடுத்து இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், எப்போதும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு கரக்கம் எனும் படத்தில் நடித்து வருவதாக ஃபெமினா ஜார்ஜ் பதிவிட்டிருந்தார்.
பாக்ஸிங் செய்யும் பல விடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லெக் ஸ்டிராட்டில் எனப்படும் கால்களை விரிக்கும் உடற்பயிற்சியின்போது, பயிற்சியாளர் அவரது கால்களை அதிகமாக நீட்டும்போது வலியால் போதும் போதும் எனக் கத்துவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.