நடிகர் டிகாப்ரியோவின் ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படத்திற்கு கோல்டன் குளோப் விருது கிடைத்திருக்கிறது.
நடிகர் டிகாப்ரியோ நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படமான ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (one battle after another) மிகப்பெரிய வெற்றிப்படமானது.
வாழ்க்கை குறித்த கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்காவும் உருவாக்க ரீதியாகவும் இப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றிருந்தது.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது நிகழ்வில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் வென்று அசத்தியுள்ளது. இப்படம் ஆஸ்கர் போட்டியிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.