பாஃப்டா திரைப்பட விருதுகளில், பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் “ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்” திரைப்படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் மற்றும் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் கூட்டணியில் உருவான திரைப்படம் “ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்”.
நடிகர்கள் சான் பென், பெனிசியோ டெல் டோரோ, ரெஜினா ஹால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் உலகளவில் ரூ. 1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரிட்டன் நாட்டில் வழங்கப்படும் பாஃப்டா திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் “ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்” திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வரும் பிப். 22 ஆம் தேதி லண்டனில் நடைபெறும் விழாவில் பாஃப்டா விருதுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பி ஜோர்டானின் “சின்னர்ஸ்” திரைப்படம் பாஃப்டா விருதுகளில் 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 2026 ஆம் ஆண்டுக்கான 98 ஆவது ஆஸ்கர் விருதுகளில் “ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்” படம் 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.