அபிஷன் ஜீவிந் நடிப்பில் உருவாகும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந். இவர், நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் “வித் லவ்”
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கின்றார்.
இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையில் உருவாகும் இப்படத்தின் “மறந்து போச்சே” எனும் புதிய பாடல் இன்று (ஜன. 13) படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. மதன் எழுதிய வரிகளில், பாடகர் ஆதித்யா ஆர்.கே. இப்பாடலைப் பாடியுள்ளார்.
ஏற்கெனவே, வித் லவ் திரைப்படத்தின் “அய்யோ காதலே” எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படம் வரும் பிப். 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.