பிக் பாஸ் வெற்றியாளர் யார்? முன்னாள் போட்டியாளர்கள் கருத்து!

பிக் பாஸ் சீசன் 9 கோப்பையை வெல்வது யார்? என்பது குறித்து முன்னாள் போட்டியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளது தொடர்பாக...
பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்கள்
பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்கள் படம் - எக்ஸ்
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 கோப்பையை வெல்வது யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இறுதிப் போட்டியாளர்களாக திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிக வாக்குகள் பெற்ற நபர் பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். குறைந்த வாக்குகளைப் பெற்றதாக சான்ட்ரா கடந்த வாரத்துடன் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளதால், போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று நடிகை ஆதிரை, இசைக்கலைஞர் எஃப்.ஜே., நடிகர் அமித் பார்கவ், கனி திரு, சுபிக்‌ஷா, ப்ரஜின், கலையரசன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இதற்கு முன்பு வியானா, ரம்யா ஜோ, அப்சரா, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன்ராஜ் தேவசகாயம் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். தற்போது சமீபத்தில் வெளியேறிய கானா வினோத், சான்ட்ரா மற்றும் ரெட் கார்டு வாங்கிக்கொண்டு வெளியேறிய விஜே பார்வதி, கமருதீன் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இறுதிப் போட்டியாளர்களைக் கொண்டாடும் முன்னாள் போட்டியாளர்கள்
இறுதிப் போட்டியாளர்களைக் கொண்டாடும் முன்னாள் போட்டியாளர்கள்படம் - எக்ஸ்

இந்நிலையில், இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வாகியுள்ள 4 பேரில் கோப்பையை வெல்லும் வாய்ப்புடைய நபர் யார் என விவாதிக்கப்பட்டது. இதில் கலையரசன், பிரவீன் காந்தி உள்ளிட்டோர் திவ்யாவுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறினர். இதேபோன்று அமித் பார்கவ், ரம்யா ஜோ, வியானா உள்ளிட்டோர் சபரிக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இவர்கள் வெளியே இருந்து வந்தவர்கள் என்பதால், மக்களிடமுள்ள எதிர்பார்ப்பின் அடிப்படையில் வெற்றியாளரைத் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்கள்
தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!
Summary

Who will be Bigg Boss winner? Former contestants' predictions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com