காந்தி டாக்ஸ் படத்தின் முன்பதிவு தொடக்கம்!

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடித்துள்ள காந்தி டாக்ஸ் படம் குறித்து...
Vijay Sethupathi in the film Gandhi Talks.
காந்தி டாக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி. படம்: எக்ஸ் / ஜீ ஸ்டூடியோஸ்.
Updated on
1 min read

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காந்தி டாக்ஸ் திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடிப்பில் வசனங்களே இல்லாத சைலண்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது.

இந்தப் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட விழாவில் தேர்வாகியது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜன. 30 அன்று திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. வசனங்களே இல்லாமல் காட்சிகளாக இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை ரசிக்க வைத்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. கடைசியாக வெளியான விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Vijay Sethupathi in the film Gandhi Talks.
100 கிழவிகளின் மாதிரி... தாய் கிழவி படத்தில் ராதிகாவின் ஒப்பனை!
Summary

Advance booking has begun for the film Gandhi Talks, starring actor Vijay Sethupathi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com