கருவுற்றிருக்கும் நடிகை சமந்தா, 'என்னுடைய சிக்ஸ் பேக்' என்று, தன்னுடைய வயிறை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அதனுடன் 'என்னுடைய சிக்ஸ் பேக், விரைவில் நாம் சந்திக்கலாம்' என்றும் பதிவிட்டிருப்பதால், தான் ஆறு மாத கர்ப்பிணி என்பதை சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறாரா சமந்தா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், அவர் அன்போடு சிக்ஸ் பேக் என்று அழைத்திருக்கிறாரா? ஆறு மாத கர்ப்பிணியா என்பதை உறுதி செய்யவில்லை.
நடிகை சமந்தா, கருவுற்றிருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனை ஒரு சில நாள்களுக்கு முன்பு அவரே உறுதிப்படுத்தியிருந்தார்.
தமிழ்,தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா விவாகரத்து, உடல்நலப் பாதிப்புகளைக் கடந்து, 2025 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துக்கொண்டார்.
இயக்குநரும் கணவருமான ராஜ் நிடிமோருவின் கதையில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து மா இண்டி பங்காரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா தான் தாயாகப்போவதை உறுதி செய்து, அது பற்றி பேசியிருந்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் ஒரு சிறு இடைவேளை எடுக்க வேண்டும். அதன் பிறகு நான் மீண்டும் நடிக்க வருவேன், நான் மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டுமென எனக்குத் தெரியும் என்று கூறி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.
இதற்கு முன்பே நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அவர் தாயாகப் போகிறார் என்பதை உறுதி செய்து வந்தன. இந்தச் சூழலிதான், நடிகை சமந்தாவே தான் தாயாகவிருப்பதை உறுதி செய்திருந்தார்.
Summary
Which month is it? Actress Samantha makes a cute announcement!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

தாயாகிறாரா நடிகை சமந்தா?

அளவிட முடியாத மகிழ்ச்சி... கவனம் பெறும் சமந்தாவின் பதிவு!

முதல்வர் விஜய்யை சந்தித்த நடிகை சமந்தா!
விடியோக்கள்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS



