முதல்வர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளாதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் இந்தாண்டு பொங்கலன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது.
படக்குழு நீதிமன்றம் சென்றபோதும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தாமதமானது. இதனிடையே, படம் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று விஜய் முதல்வரானார். எனவே, படம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது சென்சார் சான்றிதழ் வழங்க சென்சார் கமிட்டி ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் இம்மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.
அதேபோல, முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படமான சிக்மா ஜூலை 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜனநாயகன் படமும் ஜூலை 31 அன்று வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு வெளியானால் தந்தை - மகன் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதாக அமையும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
Summary
Reports indicate that the films of Vijay and his son Jason Sanjay are set to be released on the same day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பா.. முதல் முறையாக இணையத்தில் வைரலாகும் முதல்வர் விஜய் மகன் சஞ்சயின் விடியோ

சிக்மா ஸ்டைல் பாடல்!

சிக்மா முதல் பாடல் அப்டேட்!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK




