தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அப்பா.. முதல் முறையாக இணையத்தில் வைரலாகும் முதல்வர் விஜய் மகன் சஞ்சயின் விடியோ

உங்க அப்பா என்ன செய்தார் தெரியுமா என முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பற்றிய விடியோ

News image

நடிகர் சந்தீப் கிஷன் உடன் இயக்குநர் ஜேசன் சஞ்சய். பிரதி படம் - படம்: லைகா புரடக்‌ஷன்ஸ் பிரதி படம்

Updated On :1 ஜூலை 2026, 1:04 pm IST

உங்க அப்பா என்னை அப்படியே கடத்திக்கொண்டு போய்விட்டார் என்று ஒரு சிறுவனிடம், முதல்வர் ஜோசப் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சொல்லும் விடியோ வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மகனும், விரைவில் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் ஜேசன் சஞ்சய் பற்றிய விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

நடிகர் ஜெமினி மணியின் மகனுடன், ஜேசன் சஞ்சய் பேசும்விடியோதான் அது. அதில், உங்க அப்பா என்னை ஸ்கூல்ல இருந்து கடத்திட்டுப் போயிட்டாரு என்று சிரித்தபடியே கூறுகிறார்.

மேலும், அப்போ, இவரை யாரென்றே எனக்குத் தெரியாது, தெரியாத ஒருவர், நம்மைத் தூக்கிக் கொண்டு ஓடினால் பயம் வருமா? வராதா? என்றும் அப்போது தான் பயந்தது குறித்தும் சஞ்சய், அதே குழந்தைத் தனத்தோடு பகிர்ந்து கொண்டிருப்பது பலராலும் வெகுவாக ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

விஜய்யின் ரசிகராக இருந்த ஜெமினி மணியை, சஞ்சய் தற்போது தன்னுடைய படத்தில் நடிக்க வைத்துள்ளார். படப்பிடிப்புக்கு, ஜெமினி மணி தன்னுடைய மகனை அழைத்து வந்த போது, சிறு வயதில், அவருடைய தந்தை தன்னை கடத்திச் சென்ற சம்பவம் குறித்து, எந்த பந்தாவும் இல்லாமல், சிறுவனிடம் சஞ்சய் ஒரு குழந்தையை போல பேசுவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Story image

அது என்ன கடத்தல் சம்பவம்?

ஜெமினி மணி, விஜய்யின் தீவிர ரசிகர். ஒரு நாள். விஜய்யைக் காண வேண்டும் என்பதற்காக, அவரது மகன் படிக்கும் பள்ளிக்கு வந்துள்ளார். மகனை அழைத்துச் செல்ல விஜய் வந்த போது, சஞ்சய்யை ஜெமினி மணி தூக்கிக் கொண்டு விஜய் கார் இருக்கும் இடத்தை நோக்கி ஓடியிருக்கிறார். ஆனால், ஜெமினி மணி யாரென்று யாருக்குமே தெரியாத காலத்தில், விஜய் மகனை அவர் கடத்திச் செல்வதாகவே பலரும் நினைத்து கூச்சலிட்டுள்ளனர்.

ஆனால், சஞ்சயை விஜய் காரில் உட்கார வைத்துவிட்டு விஜய்யிடம் தான் உங்கள் ரசிகர் என்று பேசியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்துத்தான் சஞ்சய் இப்போது கூறியிருக்கிறார்.

Summary

A video of Vijay's son Sanjay goes viral on the internet for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.