FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

ஜேசன் சஞ்சய் பிறந்த நாள்! முதல்வர் விஜய் வாழ்த்தியிருப்பாரா?

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் -இன் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருவது பற்றி...

News image

ஜேசன் சஞ்சய் - முதல்வர் விஜய் - Social media

Updated On :25 ஜூலை 2026, 2:35 pm IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் மகனும் இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய்யின் பிறந்த நாளையொட்டி பலரும் அவருக்கு இன்று வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், திரைத்துறையில் இயக்குநராக 'சிக்மா' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் இன்று (ஜூலை 25) தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதையொட்டி திரையுலகினர், நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அவர் இயக்கிய 'சிக்மா' படத்தின் குழுவும் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ஜேசன் சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளது.

Story image

"ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்கள் பயணம் குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளால் நிறைந்திருக்கட்டும்" என்று வாழ்த்து கூறி இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய்யின் தந்தையும் முதல்வருமான ஜோசப் விஜய், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பாரா? என சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனெனில் முதல்வர் விஜய் - அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. பிரபல நடிகை ஒருவர் மீதும் சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தன்னுடைய குழந்தைகள் தன்னுடன் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில்கூட சங்கீதா, ஜேசன் சஞ்சய் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா பட வெளியீட்டில்கூட விஜய் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. முதல்வர் விஜய்யின் 'ஜன நாயகன்' வெளியீட்டால் வருகிற ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவுள்ள சிக்மா பட வெளியீடு ஆகஸ்டிற்குத் தள்ளிப்போகலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள சிக்மா படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் சஞ்சய்க்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து குவிந்து வரும் நிலையில் முதல்வர் விஜய் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருப்பாரா?

Summary

Jason Sanjay's birthday: Did Chief Minister Vijay wish him?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.