FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

அப்பாதான் முதல் தேர்வு... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்!

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது தந்தையான முதல்வர் விஜய் குறித்து பேசியிருப்பதாவது...

News image

சிறுவயதில் விஜய்யுடன்... தற்போதைய ஜேசன் சஞ்சய். - படங்கள்: போக்கிரி பாடலில் இருந்து, லைகா புரடக்‌ஷன்ஸ்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:12 pm IST

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது தந்தையான முதல்வர் விஜய் குறித்து பேசியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

ஜேசன் சஞ்சய் யூடியூப் நேர்காணல் ஒன்றில், “ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமானால் அதில் முதலில் அப்பாதான் தனது விருப்பத் தேர்வாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.

நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக மாறியிருக்கிறார் ச. ஜோசப் விஜய். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சிக்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனத் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசியபோது தொகுப்பாளினி டிடி உடன் ஜேசன் சஞ்சய் பேசினார். அதில் அவரிடம், “ஹாலிவுட் நடிகர் ஜேசன் உடன் தமிழ்நாட்டு ஹூரோவை யாரை நடிக்க வைக்கலாம்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜேசன் சஞ்சய், “என்னுடைய முதல் தேர்வு அப்பாதான். காம்பினேஷன் நன்றாக இருக்கும்” என்றார். சமீபத்தில் அவருக்கும் அவரது தந்தையான விஜய்க்கும் சண்டை என்பதுபோல் பலர் புரளியைக் கிளப்பி வந்தார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தப் பேட்டி அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் விஜய் ஆதரவாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

My father is my first choice for acting in Hollywood: Jason Sanjay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.