சில நடிகைகள், ஓரிரு படங்களில் நடித்துவிட்டு, நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்து விடுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இஷா கோபிகர்.
நெஞ்சினிலே என்ற திரைப்படத்தில் இஷா கோபிகர் முதல்வர் ஜோசப் விஜய் உடன் சேர்ந்து நடித்திருப்பார். இவர் 1998ஆம் ஆண்டு வெளியான காதல் கவிதை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அரவிந்த் சுவாமியுடன் என் சுவாசக் காற்றே, விஜய் உடன் நெஞ்சினிலே போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். ஜோடி மற்றும் அயலான் திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது, வயது குறித்து அவர் ஒரு ஆழமான கருத்துகளை பதிவிட்டிருக்கிறார். பெண்களுக்கு வயது ஒரு பிரச்னை, ஆனால், ஆண்களுக்கு அதுவே அனுபவம் ஆகிறது.
அவர் ஹிந்தியில் பேசி ஒரு விடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் இது வியப்பாக இல்லையா, ஆணுக்கு வயதானால் அனுபவம், பெண்ணுக்கு வயதானால் அது பிரச்னை. திரைப்படங்களிலும் கதாநாயகன்கள், தங்களை விட வயதில் பாதிக்கும் குறைவான வயதுள்ள கதாநாயகிகளுடன் நடனமாடுகிறார்கள். அவர்கள்தான் அந்த நாயகியின் கதாநாயகன், இது மிகவும் இயல்பாக நடக்கிறது.
ஆனால், ஒரு பெண் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினாலோ, ஸ்டைலாக இருந்தாலோ, உங்கள் வயதை கருத்தில் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், இந்த நேரத்தில் சொல்வது ஒன்றுதான், பெண்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் மிகவும் ஆழமானவர்கள். அவர்களது நம்பிக்கை சப்தமாகக் கேட்காது, அவரது முகத்தில் இல்லை, அவரது அழகு, அவரது வாழ்க்கைப் பயணத்தில் உள்ளது. முகச் சுருக்கம் அவரது வயதைக் காட்டவில்லை, அவரது வாழ்க்கையின் போராட்டங்களைத்தான் காட்டுகின்றன என்று மிக அழகாகப் பேசியிருக்கிறார்.
ஒரு வயதான பெண்ணின் வாழ்க்கையில் அவரது காயங்களையும் அதனை அவர் எவ்வாறு ஆற்றினார் என்பதையும் பாருங்கள். அனைவருக்குமே வயதாகும். எனவே, யாரையும் வயதான பெண் என்பதால் அவமரியாதை செய்யாதீர்கள், மரியாதைக்கு முடிவுறும் தேதி இல்லை. என்று தெரிவித்துள்ளார். அந்த விடியோ வைரலாகி வருகிறது.
Summary
An actress has released a video on her Instagram page discussing her age. She has acted alongside Chief Minister Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வராக ஒரு மாதம் நிறைவு: சித்தராமையாவிடம் ஆசி பெற்ற சிவகுமார்!

மகன் சஞ்சய்யுடன் மோதுகிறாரா முதல்வர் விஜய்?

விஜய் செயலை அதிகம் நம்புவார்: ஷோபா சந்திரசேகர்

அகல் சுடரும் அறப்பயணமும்...
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




