ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி 'ஹேப்பி ராஜ்' என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளிவந்த 'முரட்டுக்காளை' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தனது அனுமதியின்றி தனது பாடலை உருமாற்றி பயன்படுத்தியுள்ளனர். எனவே அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். 'ஹேப்பி ராஜ்' படத்தில் இருந்த அந்தப் பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம் குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.சரவணன், இளையராஜா அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் 'ஹேப்பிராஜ்' படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலை உருமாற்றி இருப்பதால் பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஹேப்பி ராஜ்' படத்தில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற பாடலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். ஹேப்பி ராஜ் வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையில் இளையராஜா பாடலுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Madras High Court has issued an injunction banning the use of an Ilaiyaraaja song in the G.V. Prakash-starrer movie 'Happy Raj'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










