ஜன நாயகன் திரைப்படத்தை வெளியீடுவதற்கான திரையரங்க பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாம். இதற்கு மேலும் இழுபறி வேண்டாமென தயாரிப்பு நிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டதாகவும் இப்படத்தை ஜூலை 16 அல்லது ஜூலை 23 ஆம் தேதி வெளியிடத் திடமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் அவரின் கடைசித் திரைப்படத்தைக் கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம், ஜன நாயகன் வெளியீடு காரணமாக இந்த மாத இறுதியில் வெளியாகவிருந்த திரைப்படங்கள் வெளியீட்டுத் தேதியை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜூலை 23 ஆம் தேதியே வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்த தரப்பினரிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளதாம். அதிக விலைக்கு டிக்கெட்களை விற்கக் கூடாது என்றுமுதல்வர் விஜய் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வரான பின் வெளியாகும் விஜய் படமென்பதால் இதுவரை இல்லாத அளவிற்குத் தமிழகத்தில் பல திரைகளில் ஜன நாயகன் வெளியாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Negotiations with theaters for the release of the movie Jana Nayagan have intensified.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1000 திரைகளுக்கு மேல் வெளியாகும் ஜன நாயகன்?

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுதானாம்!

ஜன நாயகன் பாணியில் ஜூட் நாயகன்..! ஃபிஃபா வெளியிட்ட போஸ்டர்!

மாண்புமிகு முதல்வர் விஜய்! ஜன நாயகன் திரைப்பெயர் இதுதான்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



