தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

நாட்டுப்புற, மாய எதார்த்த பாணியிலான படத்தில் தமன்னா..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை தமன்னாவின் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

News image

தமன்னாவின் புதிய படத்தின் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / தமன்னா பாட்டியா.

Updated On :9 ஜூலை 2026, 6:44 pm IST

ஏக்தா கபூர் தயாரிப்பில் நடிகை தமன்னா நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான ’தி விவான்- The Vvaan’ என்ற படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாய எதார்த்த (பேண்டஸி) பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை பஞ்சாயத் தொடரினை இயக்கிய தீபக் குமார் மிஷ்ரா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் குரோவர், மனீஷ் பால், ஸ்வேதா திவாரி, அனுப் சோனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா தற்போது பாலிவுட் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் பாடல்களுக்கு நடனமாடும் இவருக்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஓ ரோமியோ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஒடேலா 2 என்ற அவரது படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்த பேண்டஸி திரைப்படம் செப்.25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புற கதையுடன் தொடர்புடைய பேண்டஸி படமாக இது உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலாஜி மோஷன் பிகசர்ஸ் உடன் முதல்முறையாக டிவிஎஃப் மோஷன் பிக்சர்ஸ் இணைகிறது.

Summary

Sidharth Malhotra, Tamannaah Bhatia's The Vvaan to release on Sept.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.