பாடகி ஜானகி மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்த எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் இன்று மாலை கர்நாடகத்தின் மைசூரு எச்.டி. கோட்டை சாலையில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஜானகி மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “பல கோடி ரசிகர்களைப் போல ஜானகி அம்மாவின் மறைவைக் கேட்டு அதிர்ச்சியும் துயரமும் என்னை ஆட்கொண்டுவிட்டது. அவருடைய இசை ஆளுமை 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. நான் அவருடையப் பாடல்கள் கேட்டு தான் வளர்ந்தேன். பலரும் அப்படித்தான்.
ஒரு இசையமைப்பாளராக எனக்குத் தெரியும். ஒரு பாடகரிடம் இனிமையான பகுதி வந்தால் மென்மையாகப் பாடச் சொல்வோம். ஆனால், உச்சஸ்தாயியில் கூட, சப்தமாகப் பாடினாலும் இனிமையாகக் கேட்கின்ற ஒரே பாடகி ஜானகி அம்மாதான். வெகுசில பாடகர்களுக்குத் தான் அந்தத் திறமையும், ஆசீர்வாதமும் இருக்கிறது. அதுமாதிரி அவருடைய குரலும், எந்த மொழியில் பாடினாலும் அவரின் உச்சரிப்பும் நமது காதைக் கிழித்துக்கொண்டு நேராக மனதுக்குள் சென்று தாக்கத்தைக் கொடுக்கும்.
அவருடைய அந்தவொரு திறமையால் பல இசையமைப்பாளர்கள் மேலே கம்போஸ் செய்தால் நன்றாக இருக்கும் என ஒரு நம்பிக்கையையும் உணர்வையும் கொண்டு வந்த ஒரே பாடகி ஜானகி அம்மா தான்.
இன்று அவர் நம்மை விட்டுப் போனாலும், நமது காதுகளில் இதுவரை கேட்ட அவருடைய இசை இனி நம் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருக்கும்.
இந்த நேரத்தில் அவருடைய ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய இரங்கல்களையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
Summary
Even when Janaki Amma sang loudly, her voice sounded melodious: Harris Jayaraj's tribute
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








