ஹாலிட் நடிகை எலன் பர்ஸ்டின் தனது 93ஆவது வயதில் வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது பெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எலன் பர்ஸ்டின் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தி லாஸ்ட் பிக்சர்ஸ் ஷோ, ரெகியூம் ஃபார் தி ட்ரீம், தி எக்ஸோர்ஷிட் போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆஸ்கர் விருது, எமி விருது, டோனி விருது ஆகிய மூன்றும் வென்றவர்களை ட்ரிபிள் க்ரௌன் ஆஃப் ஆக்டிங் (நடிப்பின் மூன்று கிரீடம்) வென்றவர் என்பார்கள். எலன் பர்ஸ்டின் இதனை வென்றுள்ளார்.
கடைசியாக 2023ல் தி எக்ஸோர்ஷிட்: பிலிவர் படத்தில் நடித்திருந்தார். இணையத்தொடர்களில் நடித்துள்ளார். நாடகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது புதிய படமான ப்ளேஸ் டூ பி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
வெனிஸ் திரைப்பட விழா செப்.2 முதல் செப்.12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கோல்டன் லயன் விருது வழங்கப்படும். இந்த முறை அந்த விருது எலன் பர்ஸ்டினுக்கு வழங்கி கௌரவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து எலன் பர்ஸ்டின், “ஆச்சரியம்! மொத்த உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வெனிஸ் நகரத்துக்குச் சென்று, கோல்டன் லயன் விருதை எனது கைகளில் பெற்று திரும்பவிருக்கிறேன்! வெனிஸ் திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது. நான் மிகவும் கௌரமாகவும் மகிழ்ச்சியாகவும் கருணையுடன் உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
#BiennaleCinema2026 The Golden Lion for Lifetime Achievement of #Venezia83 goes to the legendary American actress #EllenBurstyn.
— La Biennale di Venezia (@la_Biennale) July 14, 2026
âWow! I not only get to travel to one of my top most favorite cities in the whole world. I get to return home carrying a Golden Lion in my arms! The⦠pic.twitter.com/EXBy3djKsj
Summary
Ellen Burstyn to receive Golden Lion at Venice International Film Festival
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு வெளியாவது மேலும் ஒரு வாரம் தாமதம்!

தொடக்க ஆட்டக்காரர்கள் கோல்டன் டக்; அயர்லாந்து அபார பந்துவீச்சு!

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

ஓம்லி குறும்பட விருது விழா: முதல் பரிசு வென்ற மட்டஞ்சேரி மாஃபியா!
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



