நடிகை ஊர்வசி தனது மகளை கன்னட சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.
கன்னடத்தில் அனுப் ஆண்டனி இயக்கும் படம் ‘புல்லி’. இந்த படத்தின் மூலம் ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி ஊர்வசி கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். படத்தில் அவர், புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் நடிகை ஊர்வசியும் நடிக்கிறார். தாய்-மகன் உறவை மையமாகக்கொண்ட ஒரு முழுமையான டார்க் காமெடி படமாக உருவாகிறது. இதுகுறித்து ஊர்வசி கூறுகையில், "என் மகள் தேஜலட்சுமி இந்தப் படத்தின் மூலம் தனது கன்னடத் திரைப்படப் பயணத்தைத் தொடங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
புவனும் அவரது குழுவினரும் கதை சொல்வதற்காக சென்னை வந்தபோது, நான் உடனே கதையுடன் ஒன்றிவிட்டேன். நான் இந்தப் படத்தில் நடித்திருக்கவில்லை என்றால், ஒரு அற்புதமான வாய்ப்பை இழந்திருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார். தாய்-மகள் இருவரும் முதல் முறையாக கன்னடத் திரைப்படம் ஒன்றில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The movie sets the stage for the mother and daughter to act together in a Kannada film for the first time.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயக்குநர் பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த ஏன் வரவில்லை? கண்கலங்கிய ஊர்வசி!

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்த ராஜ் பி. ஷெட்டி!

இன்றுவரை பாக்யராஜை நினைத்து மேக்கப் போடும் ஊர்வசி!

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



