பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஓடிடியில் வெளியாகும் காந்தாரா நடிகையின் புதிய திரைப்படம்!

'தி ரைஸ் ஆப் அசோகா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

cinema

'தி ரைஸ் ஆப் அசோகா' படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Published On :3 ஜூன் 2026, 3:58 pm IST

காந்தாரா நடிகை சப்தமி கெளடா நடித்துள்ள 'தி ரைஸ் ஆப் அசோகா' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சதீஷ் நினாசம் நாயகனாக நடித்துள்ள 'தி ரைஸ் ஆப் அசோகா' படத்தில் நாயகியாக சப்தமி கெளடா நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் பி சுரேஷ், சம்பத் மைத்ரேயா, ரவிசங்கர், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, யாஷ் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விருத்தி கிரியேஷன் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் சார்பில் வர்தன் நரஹரி, ஜெய்ஷ்ணவி மற்றும் சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார்.

1970-களில் நடக்கும் ஒரு சமூக-அரசியல் போராட்டம் மற்றும் புரட்சியை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'தி ரைஸ் ஆப் அசோகா' திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஜூன் 5 ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Summary

The film 'The Rise of Ashoka', starring Kantara actress Sapthami Gowda, is set to be released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.