நடிகர் நட்டி நடராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் “இனிமேல் தன்னை யாராவது வசைபாடினால் திரும்ப அவர்களை வசைபாடுவேன்” எனக் கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக இருந்த நட்டி நடராஜ் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான டிஎன் 2026 படம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகராக விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் திரைக்கு வெளியாகாத சமயத்தில், அவரைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தின் டிரைலர் காட்சிகள் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், “படத்தில் மட்டும் எதாவது தவறாக இருந்தால் நீ செத்த” எனக் கூற, நட்டி நடராஜ், “தம்பி தப்பு” எனக் கூறினார்.
இந்த வசனம் மிகுந்த வைரலானது. ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது அஸ்வினும் இதை வைத்தே நட்டி நடராஜைக் கிண்டல் செய்தார்.
விஜய் ரசிகர்களுக்கும் இவருக்கும் எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நட்டி நடராஜ் இரண்டு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், “யாராவது என்னிடம் ஆபாச மொழிகளைப் பயன்படுத்தினால் நானும் பயன்படுத்துவேன்” என்று கூறியிருந்தார்.
மற்றுமொரு பதிவில், “கடைசி எச்சரிக்கை. இனிமேல் யாராவது என்னை வசைபாடினால் நானும் அவர்களை வசைபாடுவேன். என்ன நடந்தாலும் கவலையில்லை” எனக் கூறியுள்ளார். இதற்கும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
Summary
Last call.. any one abuse me .. I ll abuse u back says actor Natty Nataraj
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெதன்யாகுவை ‘பைத்தியம்’ எனக் கூறியது உண்மைதான்! டிரம்ப்
இணையவழியில் ரூ.5.87 லட்சம் மோசடி: ராமநாதபுரம் இளைஞா் கைது

தமிழ்நாட்டின் தலைவர் எனக் கூற விஜய்க்கு அதிகாரமில்லை: ஆ. இராசா

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani


