காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

முதல்வர் விஜய்யை சந்தித்த நடிகை சிம்ரன்!

தமிழக முதல்வர் விஜய்யை நடிகை சிம்ரன் இன்று சந்தித்தார்.

Actress Simran with Chief Minister Vijay

முதல்வர் விஜய் உடன் நடிகை சிம்ரன்

Published On :

தமிழக முதல்வர் விஜய்யை நடிகை சிம்ரன் இன்று சந்தித்தார்.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பின் பல்வேறு அரசியல் தலைவர்களும்,. நடிகர்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சிம்ரன் இன்று குடும்பத்தினருடன் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

விஜய் - சிம்ரன் இணைந்து நேருக்கு நேர், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், உதயா, ஒன்ஸ் மோர், யூத் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்பட ஜோடியான இவர்கள் நீண்டகால நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இன்று முதல்வர் விஜய்யைச் சந்தித்தபின் சிம்ரன் தனது சமூக வலைதளப் பதிவில், “பல ஆண்டுகள் ஒன்றாக திரையில் நடித்த பிறகு, மாண்புமிகு முதல்வராக விஜய்யை குடும்பத்துடன் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. பலரையும் அவரின் வசம் ஈர்க்கும் அவரது அன்பும், பணிவும், நேர்மையும் அப்படியே மாறாமல் இருக்கின்றன.

நமது மாநிலத்தின் முன்னேற்றம் பற்றிய அவரது பேரார்வமும் தொலைநோக்குப் பார்வையும் ஊக்கமளிப்பதாக உள்ளன. தமிழகத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்ல அவருக்கு என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு குடும்பத்தினருடன் எடுத்தப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

சிம்ரன்  குடும்பத்தினருடன் முதல்வர் விஜய்

சிம்ரன் குடும்பத்தினருடன் முதல்வர் விஜய்

Summary

Actress Simran met 'Chief Minister' Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.