மகாநதி தொடரின் 2ஆம் பாகம் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பிரவீன் பென்னட்டுக்கு, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரின், படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
மகாநதி தொடரின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
கடைசிநாள் படப்பிடிப்பின்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், இதில் நடித்த அனைத்து நடிகர்களும் பங்கேற்றனர். கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், லஷ்மி பிரியா, சுவாமிநாதன் ஆகியோர் மகாநதி தொடர் மூலம் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தத் தொடரில் நடிக்கும் லஷ்மி பிரியா, சுவாமிநாதன் இணைக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் பாத்திரங்களின் பெயர்களை வைத்து விகா(விஜய், காவேரி) என்ற பக்கங்களையும் ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் மகாநதி தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட வேண்டும் என்று இயக்குநர் பிரவீன் பென்னட்டுக்கு சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Summary
Fans are requesting director Praveen Bennett on social media to make a second part of the Mahanadhi series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










