விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
ஒரே தொடரில் 3 காதல் கதைகளை மையப்படுத்தி, வித்தியாசமான பாணியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடருக்கு காதல் காதல் காதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆண், பெண் இடையே உருவாகும் காதலை மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், ஒரே தொடரில் 3 காதல்களை பிரதானப்படுத்தி எடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
ஒரே கதையில் மாறுபட்ட மூன்று ஜோடிகளின் காதல் கதையை விவரிக்கும் திரைக்கதையாக இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்து பிரபலமான அருண் பிரசாத், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மலையாள சின்ன திரை நடிகர் நலீஃப் கியா ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர்.
முத்தழகு தொடர் நாயகி ஷோபனா, அண்ணா தொடரில் நடித்து பிரபலமான சுசித்ரா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கமகள் தொடரில் நடித்த மனுஸ்ரீ கார்த்திகேயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும், பாக்கியலட்சுமி தொடர் சுசித்ரா, ஹார்ட் பீட் இணையத் தொடர் பிரபலம் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், காதல் காதல் காதல் தொடர் வரும் ஜூலை 6 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information regarding the broadcast date of the serial Kadhal Kadhal Kadhal, set to air on Vijay TV, has been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கயல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அயலி தொடர் நாயகனை கரம் பிடித்த சியாமந்தா!

சின்ன திரையின் டாப் 5 சீரியல்கள்! முதலிடத்தில் மூன்று முடிச்சு!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




