கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

நடிகை சமந்தா தாயாகப்போவதை உறுதி செய்துள்ளார்...

News image

நடிகை சமந்தா... - Youtube

Updated On :24 ஜூன் 2026, 9:41 pm IST

நடிகை சமந்தா தாயாகப்போவதை உறுதி செய்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2025 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தனது கணவரான ராஜ் நிடிமோரு கதை எழுதி, சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ”மா இண்டி பங்காரம்”. இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், “மா இண்டி பங்காரம்” படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா தான் தாயாகப்போவதை உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது,

“நான் ஒரு சிறிய இடைவேளை எடுக்க வேண்டும். அதன் பிறகு நான் மீண்டும் நடிக்க வந்துவிடுவேன். நான் மகப்பேறு விடுமுறை எடுக்க வேண்டுமென எனக்குத் தெரியும்.” எனக் கூறியுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான நடிகை சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி அவர் தாயாகிறாரா? எனக் கேள்விகளை எழுப்பின. இந்தச் சூழலில், சமந்தாவே தான் தாயாவிருப்பதை உறுதி செய்துள்ளதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actress Samantha has confirmed her pregnancy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.