எம்ஜிஆர் மறைந்தபோது, அவர் பாதி நடித்து நிறைவுறாத படத்தின் காட்சிகளை அடிப்படையாக வைத்து புதிய திரைக்கதை அமைத்து அவசர போலீஸ் 100 என்ற படத்தை கே. பாக்யராஜ் எடுத்ததாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய கே பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
புரட்சித் தலைவர் அவர்களும் பாக்யராஜ் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Bhagyaraj made the film 'Avasara Police 100' for MGR: Edappadi Palaniswami offers condolences.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








