/

இதயம் முரளி படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!

இதயம் முரளி திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாக உள்ளது பற்றி...

News image

இதயம் முரளி படத்தின் பாடல் வெளியீடு. - படம் - எக்ஸ்

Updated On :30 ஜூன் 2026, 8:24 pm IST

இதயம் முரளி திரைப்படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். நடிகர்கள் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் இணைந்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகின. இந்த நிலையில், ’கட்டழகி’ என்னும் பாடல் நாளை (ஜுலை 1) வெளியாக உள்ளது.

இந்தப் படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The film crew announced on Tuesday (June 30) that the next song from the movie Idhayam Murali is set to be released tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.