சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அப்போதெல்லாம் கண்ணீர் விட்டிருக்கிறேன்: ஸ்ரீலீலா

எதிர்மறை விமர்சனங்கள் குறித்து ஸ்ரீலீலா...

News image

ஸ்ரீலீலா

Updated On :22 மார்ச் 2026, 11:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ஸ்ரீலீலா தன் மீதான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினைத் துவங்கியவர், நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாதால் திரைத்துறைக்கு வந்தார்.

இதற்கு முன்பாகவே 2019 இல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். இவர் நடித்த பகவந்த் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன.

தமிழில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, மருத்துவ பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஸ்ரீலீலா, “ஆரம்பத்தில் நான் நடித்த திரைப்படங்களை யாராவது விமர்சித்து என்னை எதிர்மறையாக பேசும்போது கண்ணீர் விட்டிருக்கிறேன். பின், விமர்சனங்களையும் பாராட்டுகளையும் எப்படி கையாள வேண்டுமென கற்றுக்கொண்டதும் அவை என்னைப் பாதிப்பதில்லை. தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றதை புறக்கணிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.