தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

சினிமாவில் 49 ஆண்டுகள்! ராதிகாவை வாழ்த்திய ஹாய் படக்குழு!

ராதிகாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்த ஹாய் படக்குழு...

News image
Updated On :23 மார்ச் 2026, 1:30 pm IST

நடிகை ராதிகா சரத்குமார் சினிமா பயணத்தில் 49வது ஆண்டிற்குள் நுழைகிறார்.

தமிழ் சினிமாவில் மிகத் திறமையான நடிகை, தயாரிப்பாளர் எனப் பெயரெடுத்தவர் ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரை வாழ்வை ஆரம்பித்த ராதிகா 48 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார்.

பல கதாநாயகர்களுக்கு நாயகியாகவும் அம்மாவாகவும் நடித்தவர் தற்போது தாய் கிழவி என்கிற திரைப்படத்தில் பனுவுத்தாயாக நடித்து அசத்தினார். ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இப்படம் தமிழ் சினிமாவின் நல்ல திரைப்படங்களில் ஒன்று என்கிற பெயரையும் பெற்றது.

தென்னிந்தியளவில் காத்திரமான நடிகை எனப் பெயரெடுத்தவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Story image

தற்போது, நடிகர் கவினுடன் இணைந்து ஹாய் திரைப்படத்தில் நடிக்கிறார். இதில், நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த நிலையில், ராதிகாவின் சினிமா பயணத்தில் இது 49-வது ஆண்டு என்பதால் அதனைக் கொண்டாடும் விதமாக ஹாய் படக்குழுவினர் கேக் வெட்டி ராதிகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.