நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

வெறுப்பு பிரசாரம்..! துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்!

இயக்குநர் வெற்றிமாறன் துரந்தர் படத்தை விமர்சித்தது குறித்து...

Dhurandhar film ranveer singh, Vetrimaaran.

துரந்தர் படத்தில் ரன்வீர் சிங், வெற்றிமாறன். - படங்கள்: ஜியோ ஸ்டூடியோஸ், ens.

Published On :28 மார்ச் 2026, 3:21 pm IST

இயக்குநர் வெற்றிமாறன் துரந்தர் படத்தினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நீளிரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மறைமுகமாக துரந்தர் படத்தினை விமர்சித்துள்ளார்.

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில், நவீன் சந்திரா நடிப்பில், சோமிதரண் இயக்கத்தில் நீளிரா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித், நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. நேற்று வெளியான இந்தப் பட டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் பட விழாவில் வெற்றிமாறன் பேசியிருப்பதாவது:

நீளிரா திரைப்படம் வெறுப்பையோ வன்முறையையோ விற்கவில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு, வெறுப்பை பிரசாரம் செய்து பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை. போரில் ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்க்கும் உணர்வைத் தருகிறது.

இந்தக் காலத்தில் எல்லாமே பிரசாரமாக மாறுகிறது. இந்த பிரசாரம் நமது நினைவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பண மதிப்பிழப்பின்போது வரிசையில் நின்று யார் இறந்துபோனார்கள் என்று நமக்குத் தெரியும். அதனால் யார் பாதிப்படைந்தார்கள் என்றும் நமக்குத் தெரியும். ஆனால், இந்தப் பாதிப்பை பிரசார படங்களின் மூலம் எளிமையாக மாற்றிவிட முடிகிறது.

இந்தமாதிரி நேரங்களில் நாம் வெறுப்பு பிரசாரத்துக்கு எதிராக நல்ல படங்களை எடுக்க வேண்டும். இந்தப் படம் வெற்றி அடையும் ; வெற்றியடைய வேண்டுமென நினைக்கிறேன். தொடர்ந்து இந்த மாதிரி படங்களை இயக்குநர் எடுக்க வேண்டும் என்றார்.

ஆதித்யா தார் இயக்கிய துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தில் பண மதிப்பிழப்பை சரியெனக் கூறியிருந்தது. இதுவரை ரூ.1,088 கோடி வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Hate propaganda Vetrimaaran criticized the film Dhurandhar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.