விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நடிகை சத்யா தேவராஜன் மற்றும் நடிகர் கிரிஷ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வரும் தொடர் ‘தனம்’. இந்தத் தொடர் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சக்திவேல் தொடர் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இன்று முதல் பிற்பகல் 1.30 மணிக்கு தனம் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா தேவராஜன். இவர் தனம் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
தனம் தொடரில், ஸ்ரீகுமார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார், அவர் இறந்த பிறகு அந்த ஆட்டோவின் மூலம் சத்யா தனது குடும்பத்தை எவ்வாறு கவனித்துக் கொள்கிறாள் என்பதே மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
நாயகனாக கிரிஷ் நடித்து வருகிறார். ‘தனம்’ தொடர் கடந்தாண்டு பிப். 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது, டிஆர்பியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The broadcast time for the series Dhanam, currently airing on Vijay TV, has been changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


