சிங்கப் பெண்ணே தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை மணிஷா தனது 25 வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.
பல நடிகைகள் தங்களின் வயதை மறைத்து பிறந்தநாள் கொண்டாடிவரும் நிலையில், நடிகை மணிஷா தனது வயதை வெளிப்படையாக அறிவித்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு சிங்கப் பெண்ணெ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை மணீஷா மகேஷ் நாயகியாகவும் அமல்ஜித் நாயகனாகவும் நடிக்கின்றனர்.

சிங்கப் பெண்ணே - இன்ஸ்டாகிராம்
இவர்கள் மட்டுமின்றி தர்ஷக் கெளடா, யோகலட்சுமி, நிவேதா ரவி, ரேகா ஏஞ்சலின் உள்ளிட்ட பலரின் நடிப்பும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
கிராமத்தில் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து நகரத்திற்கு வரும் இளம்பெண் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
வேலைக்காக நகரங்களில் தங்கிப் பணிபுரியும் பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகளையும் அவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு உதவும் உணர்வுப்பூர்வமான மனிதர்களையும் பாத்திரங்களாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
2023 அக்டோபர் 9 ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு, ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இத்தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை மணீஷா இன்று தனது 25 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதன் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மணீஷா மகேஷ் - இன்ஸ்டாகிராம்
அதில், தனது வயதை எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக அறிவித்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். நடிகை மணீஷாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்பெண்ணே தொடரின் மறுஒளிபரப்பு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Sun tvs Singapenne Serial Actress Maneesha Mahesh Celebrates 25th Birthday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனக்குத்தானே பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!

முன்பே வா என் அன்பே வா! த்ரிஷாவின் புதிய வைரல் விடியோ!

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

புதிய கார் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய சீரியல் நடிகை!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai




