சின்ன திரை நடிகை பரமேஸ்வரி ரெட்டி புதிய வீடு கட்டி குடியேறியுள்ளார். வீட்டிற்கான புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் சின்ன திரையில் அறிமுகமாகி ஓராண்டுக்குள் பரமேஸ்வரி, புதிய வீடு கட்டியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் 238 நாள்களில் நிறைவடைந்தது பெரும் ஏமாற்றமே.

மனசெல்லாம் தொடரிலிருந்து...
இரண்டு ஜோடிகளின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடரில் பரமேஸ்வரி ரெட்டி நந்தினி என்ற பாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக தீபக் நடித்திருந்தார். மற்றொரு ஜோடியாக வெண்பா, ஜெய்பாலா நடித்திருந்தனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த தொடர்களில் அதிக டிஆர்பி பெற்ற தொடராக மனசெல்லாம் இருந்த நிலையில், திடீரென முடிக்கப்பட்டது.
இத்தொடருக்குப் பிறகு தனிப் பாடல்களில் பரமேஸ்வரி நடித்து வருகிறார். இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் ஒளிபரபான நம்பர் ஒன் கோடாலு என்ற தொடரில் துணைப் பாத்திரத்தில் பரமேஸ்வரி நடித்திருந்தார்.

புதிய வீட்டில் நடிகை பரமேஸ்வரி - இன்ஸ்டாகிரம்
இந்நிலையில் இவர் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். சமீபத்தில் புதுமனை புகுவிழா நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களுடன்
தமிழ் சின்ன திரையில் ஓராண்டு மட்டுமே நடித்திருந்த நிலையில், சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு பரமேஸ்வரி ரெட்டி உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பரமேஸ்வரி ரெட்டி - இன்ஸ்டாகிராம்

பரமேஸ்வரி ரெட்டி - இன்ஸ்டாகிராம்
கனவை நோக்கி உழைக்கும் பெண்கள், பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவடைய முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக பரமேஸ்வரி ரெட்டி மாறியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Manasellam Serial Actress Parameswari reddy new house warming viral photos
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய சீரியல் நடிகை பரமேஸ்வரி!

புதிய கார் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய சீரியல் நடிகை!

இன்ஸ்டாகிராமில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

ஆன்மிக பயணத்தில் நடிகை சைத்ரா ரெட்டி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




